ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஹாரி ப்ரூக் கேப்டன்; அணியில் மீண்டும் லியம் லிவிங்ஸ்டன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை ஹாரி ப்ரூக் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பட்லர் விலகல், ஹாரி ப்ரூக் கேப்டன்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியை பில் சால்ட் வழிநடத்தி வரும் நிலையில், ஒருநாள் தொடருக்கான கேப்டனாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சவாலான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம்: வங்கதேச கேப்டன்

25 வயதாகும் ஹாரி ப்ரூக் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டார். அவர் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

லியம் லிவிங்ஸ்டன் அணியில் சேர்ப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜோஸ் ஹல்லும் காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஜோஸ் ஹல்லின் பெயர் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்பாக ஜோஸ் ஹல் காயத்திலிருந்து மீண்டு வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லியம் லிவிங்ஸ்டன் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஆரம்பத்தில் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் லிவிங்ஸ்டனின் பெயர் இடம்பெறவில்லை. டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து அவர் ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஷுப்மன் கில் இல்லையா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கோப் பெத்தல், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், லியம் லிவிங்ஸ்டன், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்ளே, ஜான் டர்னர் மற்றும் ஆலி ஸ்டோன்.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு