ஆஸி.க்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி சௌத்தாம்டனில் நடைபெறுகிறது.

உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மிகவும் முக்கியம்: ரிஷப் பந்த்

ஜோஸ் பட்லர் விலகல்

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணியை பில் சால்ட் கேப்டனாக வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள ஜோஸ் பட்லருக்குப் பதிலாக அணியில் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடரில் விளையாடுவாரா?

டி20 தொடரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி டிரண்ட்பிரிட்ஜில் தொடங்குகிறது. டி20 தொடரிலிருந்து விலகியுள்ள ஜோஸ் பட்லர் ஒருநாள் தொடரில் விளையாடுவதும் சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை உயிரிழப்பு!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

பில் சால்ட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கரண், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியம் லிவிங்ஸ்டன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, அடில் ரஷீத், ஜேமி ஓவர்டன், ரீஸ் டாப்லி மற்றும் ஜான் டர்னர்

ஜோஸ் பட்லர் விலகியதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பில் சால்ட், தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை