ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இவர்கள் முக்கியம்: ஆஸி. முன்னாள் கேப்டன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்திய அணியின் இரண்டு வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார்.

பார்டர் – கவாஸ்கர் கோப்பை

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நியூசி.க்கு 68 ரன்கள் தேவை, இலங்கைக்கு 2 விக்கெட்டுகள் தேவை; வெற்றி பெறப்போவது யார்?

பும்ரா, ரிஷப் பந்த் முக்கியம்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக 3-வது முறையாக கைப்பற்ற ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் முழு உடல்தகுதியுடன் இருப்பது மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இயான் சாப்பல் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பயங்கர கார் விபத்துக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ள ரிஷப் பந்த்தின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. இந்திய அணியில் உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் அவர் மிகவும் முக்கியமானவர். ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அவர் அணியில் மிக முக்கிய வீரராக இருப்பார்.

இயல்பாகவே எனக்கு பேட்டிங் வருகிறது: ரவிச்சந்திரன் அஸ்வின்

கடந்த 2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை காக்கும் விதமாக 97 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல, காபாவில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் அவர் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது தற்போதும் பெரிய அளவில் பேசப்படுகிறது. ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மிகச் சரியான விக்கெட் கீப்பராக அவர் இருப்பார்.

இந்திய அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் உடல்தகுதியும் மிகவும் முக்கியம். பும்ராவும், முகமது சிராஜும் கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, சிறப்பாக செயல்பட்டனர். தொடரின் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் அளவுக்கு பும்ரா உடல் தகுதியுடன் இருப்பது மிகவும் முக்கியம். வேகப் பந்துவீச்சில் முகமது ஷமியும் இருக்கிறார்.

ஃபார்முக்குத் திரும்ப தடுமாறும் மூத்த வங்கதேச வீரர்; ஆதரவளிக்கும் கேப்டன்!

சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இளம் வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணியில் உள்ள வீரர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து அவர்களை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்