ஆஸி. தலைமைப் பயிற்சியாளராக மெக்டொனால்டு 2027 வரை நீட்டிப்பு!

ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்ட் 2027 வரை ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஜஸ்டின் லாங்கரிடமிருந்து 2022 முதல் ஆஸி.யின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு ஆண்ட்ரூ மெக்டொனால்டிம் ஒப்படைக்கப்பட்டது. இவருடையை தலைமையில் ஆஸி. அணி 2023இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பைகள் வென்றன.

ஆஸ்திரேலியாவுக்கு ஆல் ரவுண்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை (2025-2027) ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்குள் 2027ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள், டி20யில் 2ஆம் இடத்திலும் இருக்கிறது. ஆஸி. சிறப்பாக செயல்பட மெக்டொனால்ட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தலைமைப் பயிற்சியாளர் மெக்டொனால்ட் கூறியதாவது:

மிகச் சிறந்த வீரர்கள், அணித் தலைவர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவுபவர்களைப் பெற்றதுக்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னுடன் பணியாற்றும் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மிகவும் அனுபவம், தொழில் நேர்த்தி, அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். அதனால்தால் இவ்வளவு வெற்றிகள் கிடைத்துள்ளது. அதைவிடவும் ஒற்றுமை, நம்பிக்கை, உள்ளடங்கிய முடிவுகள்தான் முக்கியமாக இருக்கின்றன.

அனைத்து அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் என்பது சவாலானதாகவே உள்ளது. இருந்தும் எங்களது அணி சிறப்பாக செயல்படுவது குறித்த பெருமிதம் இருக்கிறது. அனைத்து கிரிக்கெட்டிலும் எங்களது வீரர்கள், பயிற்சியாளர்கள் ஒன்றினைந்து செயல்படுவது பாராட்டத்தக்கது என்றார்.

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!