ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லாபதா லேடீஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அடுத்தாண்டு வழங்கப்படுகின்றன. இதற்காக, பல நாடுகளிலிருந்து திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து அமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய, லாபதா லேடீஸ் திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் லகான் திரைப்படத்திற்குப் பின் இப்பிரிவில் போட்டியிடும் இந்திய படம் இதுதான்.

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் – திரை விமர்சனம்!

இறுதிப்பட்டியலில் அனிமல், மகாராஜா, தங்கலான், வாழை, ஜமா, உள்ளொழுக்கு, ஆட்டம் உள்பட 29 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நடுவர்கள் குழு லாபதா லேடீஸ் படத்தைத் தேர்தெடுத்துள்ளனர்.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலிலிருந்த இந்தியப் படங்கள்.

பெண் கல்வியை, பெண்ணிய பார்வையை முன்வைக்கும் படமாக உருவான லாபதா லேடீஸ் கடந்தாண்டு வெளியாகி பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயகாந்த் மகனை வைத்து படமெடுப்பேன்: சசிகுமார்

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!

மதச்சார்பின்மை இந்தியாவில் அவசியம்தானா? -ஆளுநர் ரவி சொன்ன விஷயம்