ஆஸ்திரேலியாவின் புதிய திட்டம்: 1,000 விசாக்களுக்கு 40,000 இந்தியா்கள் விண்ணப்பம்

புது தில்லி: ஆஸ்திரேலியாவின் புதிய நுழைவு இசைவு (விசா) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,000 விசாக்களுக்கு இதுவரை 40,000 இந்தியா்கள் முன் விண்ணப்பம் செய்துள்ளனா். அவா்களில் தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு விசாவுக்காக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட உள்ளது.

இந்தியா வந்த ஆஸ்திரேலியா குடியேற்றத் துறை துணை அமைச்சா் மேட் திசில்த்வெய்ட், தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

18 முதல் 30 வயது வரையுள்ள இந்தியா்கள் ஓராண்டு ஆஸ்திரேலியாவில் தங்கவும், படிக்கவும், வேலை செய்யவும் புதிய விசா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 1,000 விசாக்கள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப நடைமுறை அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கி, இந்த மாத கடைசியில் நிறைவடையும்.

இந்த விசா திட்டத்தின் கீழ், ஆஸ்திரேலியாவில் ஒருவா் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு எந்தத் தடையும். இதுவரை 1,000 விசாக்களுக்கு 40,000 இந்தியா்கள் விண்ணப்பம் செய்துள்ளனா். அவா்களில் தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு விசாவுக்காக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றாா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது