ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான அணி இந்தியா: நியூசி. கேப்டன்

பந்துவீச்சு பயிற்சியில் முகமது ஷமி

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின்போது, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் அணியில் இடம்பெற்று விளையாடவில்லை.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு முகமது ஷமி தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது: ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவாரா?

பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது குறித்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்பது குறித்தும் முகமது ஷமி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: நேற்று நான் பந்துவீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கு முன்பாக பாதி தூரத்திலிருந்து ஓடி வந்து பந்துவீசிக் கொண்டிருந்தேன். ஏனென்றால், அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்தேன். ஆனால், நேற்று முழுவீச்சில் வழக்கமாக பந்துவீசும்போது ஓடி வரும் தூரத்திலிருந்து ஓடி வந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டேன்.

இதையும் படிக்க: 3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து அணியை மதிப்பிட முடியாது: ரோஹித் சர்மா

எனது பந்துவீச்சு 100 சதவிகிதம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனக்கு வலி என்பது 100 சதவிகிதம் இல்லை. நீண்ட நாள்களாக பலரும் நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவேனா அல்லது இடம்பெறமாட்டேனா என்பதை தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன என்றார்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி