இங்கிலாந்தில் போராட்டம்; இந்திய தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இங்கிலாந்திற்கு வரும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டாவது வாரமாக அந்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்திற்கு வரும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"இங்கிலாந்தின் சில பகுதிகளில் நடந்து வரும் சமீபத்திய போராட்டங்கள் குறித்து இந்திய பயணிகள் அறிந்திருக்கக் கூடும். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்தியாவில் இருந்து வருபவர்கள் இங்கிலாந்தில் பயணம் செய்யும்போது விழிப்புடன் இருக்கவும், கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் செய்திகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றுவதும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்ப்பதும் நல்லது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advisory for Indian Citizens visiting the UK.@VDoraiswami@sujitjoyghosh@MEAIndiapic.twitter.com/i2iwQ7E3Og

— India in the UK (@HCI_London) August 6, 2024

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்