இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு

இன்று நடைபெற்ற 2ம் நாள்ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தார்.

முல்தான்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 328 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்துள்ளது. இன்று நடைபெற்ற 2ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

Related posts

சர்வதேச டி20 கிரிக்கெட்; ஓய்வு முடிவை அறிவித்த வங்காளதேச வீரர்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வரும் – மோசின் நக்வி நம்பிக்கை