இங்கிலாந்துக்கு எல்லாம் சரியாக செல்கிறது: முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணிக்கு எல்லாம் சரியாக செல்வதாக இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறன்றன. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

முக்கிய வீரர்கள் இல்லை

இங்கிலாந்து அணியில் அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இல்லை. தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராலி மற்றும் மார்க் வுட் இருவரும் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. இருப்பினும், இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. முக்கிய வீரர்கள் இல்லாதபோதிலும், இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றியுள்ளது.

விராட் கோலி என்னுடைய முன்மாதிரி; ஆர்சிபிக்காக விளையாட விரும்புகிறேன்: பிரியன்ஷ் ஆர்யா

இரண்டு பெரிய தொடர்கள்

இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ளது.

இயான் மோர்கன் கூறுவதென்ன?

இங்கிலாந்து அணிக்கு தற்போது எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக மிகப் பெரிய தொடர்கள் வரவிருக்கின்றன. அவர்களுக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி தற்போது செயல்படுவது போன்று சிறப்பாக செயல்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

இயான் மோர்கன் (கோப்புப் படம்)

துலீப் கோப்பை முதல் சுற்று போட்டியை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்!

முக்கிய வீரர்களின்றி சாதித்த இங்கிலாந்து

முக்கிய வீரர்களின்றியும் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டுள்ளதாக இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன், ஆலி ஸ்டோன் மற்றும் மேத்யூ பாட்ஸ் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற உதவினர். இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களான பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் மற்றும் ஸாக் கிராலி போன்ற வீரர்கள் இல்லாதபோதிலும் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டுள்ளது. கஸ் அட்கின்சன் அபாரமாக பந்துவீசுகிறார்.

பாட்மின்டனிலிருந்து ஓய்வு பெறுகிறாரா சாய்னா நேவால்?

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!