இங்கிலாந்துக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் விளையாடி முடித்துவிட்ட நிலையில், தற்போது இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 113 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தினேஷ் சண்டிமால் 79 ரன்களும், ஏஞ்ஜலோ மேத்யூஸ் 65 ரன்களும் எடுத்தனர்.

2-வது டெஸ்ட்டில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டால்… என்ன சொல்கிறார் ஸ்டுவர்ட் பிராட்?

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி 204 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்துக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!