இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!ஜேம்ஸ் ஆண்டர்சன் படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த ஆண்டர்சன் தற்போது இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக செயல்படவிருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து 704 விக்கெட்டுகளுடன் ஓய்வை பெற்றார் பிரபல இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 41 வயதிலும் நல்ல உடல்நிலையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் , முதக் வேகப் பந்து வீச்சாளர் என்ற பெருமை ஆண்டர்சனையே சேரும். முதல் இரண்டு இடங்களில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவும் உள்ளனர்.

இந்நிலையில் மே.இ.தீவுகள் உடனான மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு ஆண்டர்சன் பௌலிங் ஆலோசகராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு