இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் வுட் சேர்ப்பு!

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் வுட் சேர்ப்பு!மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம் (ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வுக்குப் பிறகு)

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி ப்ரூக், ஸாக் கிராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லான் பெனிங்டான், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட்.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 18 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்