இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடர்களில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் இல்லை; காரணம் என்ன?

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடர்களில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் இல்லை; காரணம் என்ன? இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாட் கம்மின்ஸுக்கும், ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் ஸ்டார்க்குக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாட் கம்மின்ஸ் படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாட் கம்மின்ஸுக்கும், ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் ஸ்டார்க்குக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் வருகிற செப்டம்பர் மாதத்தில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் எதிரான தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது.

வேலைப்பளு மேலாண்மை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டேவிட் வார்னர் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியை கருத்தில் கொண்டு பாட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் கேப்டனாக வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 அணி விவரம்

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கன்னோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணி விவரம்

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மார்னஸ் லபுஷேன், கிளன் மேக்ஸ்வெல், மாத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் ஸாம்பா.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்