இடைத்தேர்தல் : 10 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி!

நாடு முழுவதும் 12 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் – 10 இடங்களில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி!

இந்தியா கூட்டணி

6 மாநிலங்களில் உள்ள 12 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 இடங்களையும் இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றியை பதிவு செய்தனர்.

இமாச்சலப்பிரதேசத்தின் தேக்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கம்லேஷ் தாகூர், பாஜக வேட்பாளரை சுமார் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். கம்லேஷ் தாகூர், முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு மனைவி ஆவார். நலகர் தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றி நிலையில், ஹமீர்பூர் தொகுதி, பாஜக வசம் சென்றது.

விளம்பரம்

பிகாரை பொறுத்தவரை இடைத்தேர்தல் நடந்த ருபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங், ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை பின்னுக்கு தள்ளினார்.

மத்தியப்பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் வாக்குகள் பெற்று பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மோகிந்தர் பாகத் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

உத்தரகாண்டின் இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 4 தொகுதிகளில் மூன்றை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ், பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் ஒரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
by election

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி