இட ஒதுக்கீடுக்கு எதிரானது காங்கிரஸ்: மாயாவதி

தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கொள்கைக்குக் காங்கிரஸ் எதிரானது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது கட்சியான காங்கிரஸ் மீது கடுமையான தாக்கிப் பேசியுள்ளார் மாயாவதி.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட தகவலில்,

எஸ்சி/எஸ்டி/ஓபிசி இட ஒதுக்கீடு கொள்கை தெளிவாக இல்லை என்றும், அதற்கு மாறாகப் போலியானது மற்றும் ஏமாற்றும் தன்மையைக் கொண்டது.

இதையும் படிக்க: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

நம் நாட்டில் ஓட்டுகளுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்து, 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் வாதிடுகின்றனர்.

வெளிநாடுகளில் அந்த இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர். அவர்களின் இரட்டை நிலை குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: துரை தயாநிதி டிஸ்சார்ஜ்! சிஎம்சி மருத்துவமனையிலிருந்து திரும்பினார்!

ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல ஆணையம் அறிக்கையை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்பதும் உண்மைதான்.

மேலும் பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டைத் திறம்பட அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருத்த மசோதா பகுஜன் சமாஜ் கட்சியின் போராட்டத்தால் காங்கிரஸால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை, தற்போது ஆட்சியில் இல்லாததால் குரல் எழுப்பி வருகின்றனர் இது வெறும் பாசாங்கு தான் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!