இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை: ராகுல் சொன்ன உண்மை!

இட ஒதுக்கீடு குறித்த தனது பேச்சை சிலர் திரித்து கூறியுள்ளதாக, ராகுல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடினார். அப்போது இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமையில் நேஷனல் பிரஸ் கிளப்பில் பேசிய ராகுல், தான் கூறியவற்றை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அதனை சிலர் திரித்தும் கூறி வருவதாகக் கூறினார்.

ராகுல் கூறியதாவது, “இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித வரம்பை நீக்க வேண்டும் என்றும், ஜாதி கணக்கெடுப்பை தாமதமின்றி நடத்த வேண்டும் என்றுதான் நான் கூறியிருந்தேன். ஆனால், இடஒதுக்கீடு குறித்த தனது நிலைப்பாட்டை தவறாக மேற்கோள் காட்டிய சிலர், நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்று என்னை தவறாக மேற்கோள் காட்டியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இல்ல பூஜையில் பிரதமர் பங்கேற்பதா? வழக்கறிஞர்கள், தலைவர்கள் அதிர்ச்சி!

இப்போதும்கூட, இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதத்துக்குமேல் அதிகரிக்கப் போகிறோம்; இடஒதுக்கீட்டை நான் எதிர்க்கவில்லை என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும், ஜனநாயக பின்னடைவு மற்றும் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல் போன்ற பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு, “இந்தியாவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது ஓர் இந்தியப் போராட்டம்.

இதில் இந்தியர் தவிர்த்த மற்றவர்க்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது எங்கள் பிரச்னை; நாங்களே அதைச் சமாளிப்போம்’’ என்று பதிலளித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விராட் கோலி: ரிக்கி பாண்டிங்

இதுதவிர, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், இந்திய எல்லைகளுக்குள் சீனா மற்றும் பாகிஸ்தான் பிரச்னை, இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் குறித்தும் பேசியுள்ளார்.

இந்த நிலையில், இட ஒதுக்கீடு குறித்து ராகுல் பேசியதற்கு பாஜக அமைச்சர் அமித் ஷா, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, பகுஜன் சமாஜவாதி கட்சித் தலைவர் மாயாவதி, லோக் ஜனசக்தியின் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related posts

தேவரா வெளியீட்டு டிரைலர்!

வார இறுதியில் சந்தித்த 3 நண்பர்கள் பலி! அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து!

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை: பிசிசிஐ