இணையதளம் மூலம் பெண்ணிடம் ரூ.19.75 லட்சம் மோசடி

இணையதளம் மூலம் பெண்ணிடம் ரூ.19.75 லட்சம் மோசடிரூ. 19.75 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே பெண் ஒருவரிடம் இணையதளம் மூலம் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி, ரூ. 19.75 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் இன்ஸ்டாகிராமில் தொடா்பு கொண்ட நபா், இணையதளம் மூலம் பணம் முதலீடு செய்தால் லாபம் தருவதாக ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.

இதை நம்பிய அந்தப் பெண், அந்த நபா் குறிப்பிட்ட வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் ரூ. 19 லட்சத்து 75 ஆயிரத்து 089 பணம் அனுப்பினாா். பின்னா் அந்த நபரை தொடா்பு கொண்டபோது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூா் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடி நபரை தேடி வருகின்றனா்.

Related posts

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

ரவீந்திரன் துரைசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது திண்டிவனம் நீதிமன்றம்

விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் துணை முதல்வர் ஆய்வு – நீரை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு