இணையத்தில் வைரலாகும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2- வது டிரெய்லர்

கடந்த 10-ம் தேதி 'கல்கி 2898 ஏடி' படத்தின் முதல் டிரெய்லர் வெளியானது.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் உள்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரும் வாகனமுமான "புஜ்ஜி" அறிமுகம் ஆனது.

கடந்த 10-ம் தேதி இப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில், 'கல்கி 2898 ஏடி' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வரும் 27-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Presenting #KalkiReleaseTrailer to you all!- https://t.co/YLxAiRGo6T#Kalki2898AD in cinemas worldwide from June 27th.@SrBachchan@ikamalhaasan#Prabhas@deepikapadukone@nagashwin7@DishPatani@Music_Santhosh@VyjayanthiFilms@Kalki2898AD@saregamaglobal@saregamasouth… pic.twitter.com/0rx8MxtF59

— Kalki 2898 AD (@Kalki2898AD) June 21, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!