இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்ற இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஜபல்பூரில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த 6E-7308 விமானத்துக்கு வந்த மிரட்டல் செய்தியால் அந்த விமனாம் நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

"விமானம் தரை இறங்கியதும், அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர், மேலும் கட்டாய பாதுகாப்பு சோதனைகள் உடனடியாக தொடங்கப்பட்டன. பயணிகளுக்கு உதவி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் குளியலறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்தாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், முழுமையான சோதனைக்குப் பிறகு சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

மதியம் 2 மணிக்கு விமானம் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!