இதுதான் சர்வாதிகாரம், அவசரநிலை: சிபிஐ கைது குறித்து கேஜரிவால் மனைவி கருத்து!

இதுதான் சர்வாதிகாரம், அவசரநிலை: சிபிஐ கைது குறித்து கேஜரிவால் மனைவி கருத்து!அரவிந்த் கேஜரிவால் ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.சுனிதா கேஜரிவால்கோப்புப் படம்

திகார் சிறையிலுள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சிபிஐ மூலம் கைது செய்ததுதான் சர்வாதிகாரம் என்றும், உண்மையான அவசரநிலை எனவும் அவரின் மனைவி சுனிதா கேஜரிவால் இன்று (ஜூன் 26) தெரிவித்தார்.

தில்லி கலாக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையில் உள்ள கேஜரிவால் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

எனினும் அமலாக்கத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கேஜரிவால் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்தது.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள கேஜரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுனிதா கேஜரிவால், ''அரவிந்த் கேஜரிவால் ஜூன் 20-ல் ஜாமீன் பெற்றார். உடனடியாக அமலாக்கத் துறை தலையீட்டால் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள் சிபிஐ அவரை குறிவைத்தது. இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. இது சட்டவிரோதமானது. இதுதான் சர்வாதிகாரம். இதுவே அவசரநிலை'' என சுனிதா பதிவிட்டுள்ளார்.

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு