இது இந்தியா! இவர்தான் ரத்தன் டாடா!! பிரார்த்தனைக் கூட்டத்தில்..

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தொழிலதிபரும், எளிமைக்கும் கருணைக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய மாமனிதர் ரத்தன் டாடாவின் பிரார்த்தனைக் கூட்டத்தில் நெகிழ்ச்சியான காட்சி இடம்பெற்றிருந்தது.

தொழிலதிபர் ரத்தன் டாடா, அக்டோபர் 9ஆம் தி இரவு 11.30 மணிக்கு காலமானார். இந்திய தேசியக் கொடி போர்த்திய அவரது உடல் இன்று மும்பையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி ஓர்லியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்படவிருக்கிறது. அதற்கு முன்பு அங்குள்ள பிரார்த்தனைக் கூடத்தில் பிரார்த்தனை நடைபெறும்.

அவரது பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க, பார்சி, முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய, இந்து மதத் தலைவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடியுள்ளனர். அதுவும், ஒரேஇடத்தில் தோளோடு தோள் நின்று அவரது இறுதிப் பயணத்துக்கான பிரார்த்தனையில் பங்கேற்கிறார்கள்.

ரத்தன் டாடா

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இவர்தான் நாட்டின் உண்மையான அடையாளம் என்று பலரும் ரத்தன் டாடாவை புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மிகச் சிறந்த மனிதராக வாழ்வதுதான் மிகச் சிறந்த மிக முக்கிய மதம். மனிதநேயத்தையே அனைத்து மதங்களும் கொண்டாடுகின்றன. நாட்டின் ரத்தினம் போன்ற மனிதரை இழந்துவிட்டோம் என்றும், பல இந்திய மக்களும் தங்களது சொந்தத்தில் ஒருவரை இழந்தது போன்ற வலியையே அனுபவிப்பதாகவும் கருத்துகள் குவிந்துள்ளன.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக