இது ஜனநாயகத்தின் வெற்றி: கேஜரிவாலின் ஜாமீன் குறித்து பஞ்சாப் முதல்வர்

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் இது ஜனநாயகத்தின் வெற்றி என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

கேஜரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வரும் அவரை வரவேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைநகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், இது ஜனநாயகத்தின் வெற்றி.

இந்த வழக்கில் எதுவும் இல்லை என்று நாங்கள் நம்பினோம். அனைவரும் (சிறையில் இருந்து) வெளியே வருகிறார்கள். ஹரியாணா பேரவைத் தேர்தலில் நாங்கள் முழு பலத்துடன் போட்டியிடுவோம். கேஜரிவாலின் வருகையால் எங்களுக்கு ஒரு பெரிய சக்தி கிடைக்கும் என்றார்.

அன்னபூர்ணா விவகாரம்- பாஜக தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் "நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சுதந்திரத்தைப் பறிக்கும் அநியாயமான செயல்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டு, பிணை வழங்கி உத்தரவிட்டது.

தில்லி கலால் முறைகேடு வழக்கில் ஆறு மாதங்களாக அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டநிலையில், தற்போது சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர் தில்லி திகார் சிறையில் இருந்து இன்று மாலை வெளியே வந்தார். அப்போது சிறைச்சாலைக்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் கேஜரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர், மழைக்கு நடுவே தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக உரையாற்றினார்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து