“இது வெறும் ஆரம்பம்தான்…”: மாநிலங்களவையில் மோடி உரை

“இது வெறும் ஆரம்பம்தான்…”: மாநிலங்களவையில் மோடி உரைகுடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு மோடி பதிலுரை..பிரதமர் நரேந்திர மோடி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரையாற்றி வருகிறார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று மாலை உரையாற்றினார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது:

”சுதந்திர இந்தியாவின் பயண வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அரசுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். 10 ஆண்டுகளை கடந்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகள் செல்ல வேண்டியுள்ளது.

நாட்டு மக்களின் புத்திசாலித்தனத்தை கண்டு பெருமை கொள்கிறோம். எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை தோற்கடித்துள்ளனர். வஞ்சக அரசியலை நிராகரித்து நம்பிக்கை அரசியலுக்கு வாக்களித்துள்ளனர்.

நாடு கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ள வளர்ச்சி வெறும் தொடக்கம்தான். இன்னும் பல படிகள் நாம் வளரப் போகிறோம். இங்கே சில அறிஞர்கள் நாடு தாமாக மூன்றாவது பொருளாதாரமாக வளர்ந்துவிடும் என்று கனவு கண்டுள்ளனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் அரசு போராடும். கடந்த 10 ஆண்டு அனுபவத்தில் கூறுகிறேன், இந்தியா மூன்றாவது பொருளாதாரமாக மாறும்போது, அதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் இருக்கும்.

மாநகர, பெருநகர திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கரோனா போன்ற பேரிடர்களை கடந்து நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. சிறு நகரங்கள் கூட வரலாறு காணாத வளர்ச்சியடைய போகிறது.

கடந்த 10 ஆண்டுகளைவிட அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் நலன் கருதி பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் எதிர்க்கட்சியினரின் அணுகுமுறை மிகவும் கவலை அளிக்கிறது. மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை தாக்கும் காணொலியை கண்டேன், அதுகுறித்து ஒரு வார்த்தைகூட அவர்கள் பேசவில்லை.

1977 தேர்தல் அரசியலமைப்பை காப்பாற்றியது போன்று, இந்த தேர்தலிலும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்