இந்தியக் கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் காணவில்லை

இந்தியக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் குஜராத்தில் போர்பந்தர் கடற்கரையில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பணியாளர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மணிப்பூருக்கு எப்போது செல்வார்? -காங். விமர்சனம்

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து கடலுக்குள் சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள கப்பலில் இருந்து காயமடைந்தவர்களை மீட்க கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கடலில் அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது.

திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாக இந்தியக் கடலோர காவல்படை(ஐசிஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த விமானி மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தகவலறிந்த கடலோரக் காவல்படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் பணியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்காக ஐசிஜி 04 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை அனுப்பியுள்ளதாக ஐசிஜி தெரிவித்துள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!