இந்தியாவின் நீண்டகால பிரதமர்கள் வரிசையில் இணையும் மோடி!!!
மோடி
நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் வரிசையில் இணையவுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதன் மூலம், இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி போன்றவர்களுடன் மோடி இப்போது இணைந்துள்ளார்.
விளம்பரம்
இந்தியாவில் அதிக காலம் பதவி வகித்த பிரதமர்களைத் தற்போது பார்க்கலாம்.
ஜவஹர்லால் நேரு: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர். இவர், 1947 முதல் 1964 வரை 16 ஆண்டுகள் 286 நாட்கள் ஆட்சியில் இருந்தார். மூன்றாவது முறை போட்டியிட்டபோது கட்சிக்குள்ளும், வெளியிலும் ஏகப்பட்ட சவால்கள் இருந்தாலும், பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார். நவீன இந்தியாவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றிய நேரு, புதிய தொழிற்சாலைகள், அணைகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை தொடங்கியதோடு, அறிவியல் கல்வியை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். இவர் பிரதமர் பதவியில் இருந்தபோதே மாரடைப்பால் காலமானார்.
விளம்பரம்
இந்திரா காந்தி: இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற இந்திரா காந்தி, 1966 முதல் 1977 வரை தொடர்ந்து 3 முறை, 1980 தேர்தலில் வென்று 4ஆவது முறையும் வெற்றிபெற்றார். ஆனால், 4ஆவது முறை பதவிக்காலம் முடிவதற்கு முன்பே 1984ல் அவர் படுகொலை செய்யப்பட்டார். பசுமைப் புரட்சி மற்றும் வங்கதேசத்தை விடுவிக்க பாகிஸ்தான் உடன் நடத்திய போர் ஆகியவற்றின் மூலம் பிரபலமடைந்த இந்திரா காந்தி, பஞ்சாப் மாநிலத்தின் பொற்கோயிலில் நடத்தப்பட்ட ப்ளூ ஸ்டார் ஆபரேசனுக்கு பழிவாங்கும் வகையில், தனது மெய்க் காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
விளம்பரம்
நரேந்திர மோடி: குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்து பிரபலமான நரேந்திர மோடி, கடந்த 2014ல் பிரதமர் பதவியை ஏற்றார். அதன்பிறகு 2019 தேர்தலிலும் வென்று 2ஆவது முறையாக பிரதமர் அரியணையில் அமர்ந்தார். ஸ்வட்ச் பாரத், மேக் இன் இந்தியா, பிரதமர் கிசான் சம்மன் நிதி பொன்ற பல திட்டங்களையும், பிரச்சாரங்களையும் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பொருளாதார மறுமலர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, உலகளாவிய ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார். தற்போது 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.
விளம்பரம்
மன்மோகன் சிங்: இந்திய பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 வரை பிரதமராக பணியாற்றினார். இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 2005ல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் உடன் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் தொழில்நுட்பத்தை இந்தியா பெற வேண்டும் என்றும், உலக சந்தையில் அணு எரிபொருளை வாங்கும் திறனை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தியவர் மன்மோகன் சிங்.
விளம்பரம்
இதையும் படிங்க:
அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி? அடுத்த மாநில தலைவர் யார்? டாப் 3 இவர்கள் தான்
அடல் பிஹாரி வாஜ்பாய்: தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என்று பெயரெடுத்த வாஜ்பாய் 3 முறை பிரதமராக பதவி வகித்தார். ஆனால், ஒருமுறை மட்டுமே 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவியில் இருந்தார். இதன் மூலம், 5 ஆண்டுகள் முழுமையாக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியைச் சேராத முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். பொக்ரான் அணுகுண்டு சோதனை, பாகிஸ்தான் உடன் அமைதிப் பேச்சுவார்த்தை, கார்கில் போரில் வெற்றி போன்றவை மூலம் புகழடைந்த வாஜ்பாய், தங்க நாற்கரச் சாலை உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியவர்.
விளம்பரம்
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Lok Sabha Election Results 2024