இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 வங்கதேசத்தினர் திருப்பி அனுப்பிவைப்பு

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 வங்கதேசத்தினர் அசாம் காவல்துறையினரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் "வங்கதேசத்தினரின் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான அசாம் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பு தொடர்கிறது.

இன்று அதிகாலை 1 மணியளவில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 5 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஓடும்போதே இரண்டாக பிரிந்து சென்ற விரைவு ரயில்: பிகாரில் பரபரப்பு

அவ்வாறு இந்தியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் மஸ்தாபிஸ் ரஹ்மான், அஸ்மா பீபி, அபானி சதார், லிமா சதார் மற்றும் சுமயா அக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த வாரம் இரண்டு நாள்களில் மட்டும் பத்து வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றபோது மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின் திருப்பி அனுப்பிவைக்கப்ட்டனர் என்று ஏற்கெனவே வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால், வடகிழக்கில் 1,885 கிமீ நீளமுள்ள இந்திய-வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

அசாம் காவல்துறையும் சர்வதேச எல்லையில் அதிக உஷார் நிலையில் உள்ளது. எல்லையில் முதல் வரிசையாக பிஎஸ்எஃப் பாதுகாப்புப் படையும், இரண்டாவது வரிசையாக அசாம் காவல்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!