இந்தியாவில் அதிக சுங்க கட்டணம் கொண்ட சாலை எது தெரியுமா?

1 கி.மீ.-க்கு ரூ.3.40 வசூல்…. இந்தியாவில் அதிக சுங்க கட்டணம் கொண்ட சாலை எது தெரியுமா?

மாதிரி படம்

இந்தியாவில் அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் விரைவு சாலை எங்கே இருக்கிறது தெரியுமா? இங்கு ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.3.40 வசூலிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்கும் சுங்க கட்டணத்தை டூவீலர் தவிர்த்து மற்ற வாகன ஓட்டிகள் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எரிபொருளுக்கு இணையாக இதுவே ஒரு பெரிய பட்ஜெட்டாக மாறி வருகிறது.

நாட்டில் வெவ்வேறு சுங்க சாவடிகளில் வெவ்வெறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான சுங்க கட்டணம் கொண்ட அதிவேக நெடுஞ்சாலையாக மும்பை மற்றும் புனே இடையிலான சாலை உள்ளது.

விளம்பரம்

இங்கு மற்ற சுங்க சாவடிகளை காட்டிலும், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 1 கூடுதலாக செலுத்த வேண்டும்.

22 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் மிகப் பழமையான அதிவேக நெடுஞ்சாலையாகவும் இது கருதப்படுகிறது. இது 2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசால் கட்டப்பட்டது. மகாராஷ்டிராவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான மும்பையை புனேவுடன் இந்த சாலை இணைக்கிறது. நாட்டிலேயே முதல் 6 வழிச் சாலை என்பதும் இதுதான்.

நாட்டில் இந்த அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க சுமார் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரம் கோடி செலவானது. இதன் நீளம் வெறும் 94.5 கிலோமீட்டர்கள். இந்த சாலை நவி மும்பையின் கலம்போலி பகுதியில் தொடங்கி புனேவில் உள்ள கிவாலேயில் முடிவடைகிறது.

விளம்பரம்

இது NHAI ஆல் கட்டப்படவில்லை மாறாக மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தால் கட்டப்பட்டது. இந்த அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் 3-வழி கான்கிரீட் சேவை பாதைகளும் கட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க – Anant Ambani-Radhika Merchant Wedding: மனைவியுடன் பங்கேற்ற அட்லீ… புடவையில் வசீகரித்த நயன்தாரா!

இந்த விரைவுச் சாலை திறக்கப்பட்டதன் மூலம் மும்பை-புனே இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மும்பை-புனே விரைவுச்சாலை இரு நகரங்களுக்கு இடையே தினசரி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.

விளம்பரம்

மும்பை-புனே விரைவுச்சாலை நாட்டிலேயே மிகவும் செலவு மிக்கதாகும். இதில் பயணிக்க காருக்கு ரூ.336 கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது இந்த விரைவுச் சாலையில் ஒரு கிலோமீட்டருக்கு கட்டணம் சுமார் ரூ.3.40. நாட்டில் உள்ள மற்ற விரைவுச் சாலைகளின் சராசரி சுங்கக் கட்டணத்தைப் பார்த்தால், ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ.2.40 என வருகிறது. அந்த வகையில், இங்கு பயணிக்கும் மக்கள் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Toll gate

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்