இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ-போன் 16 விரைவில் அறிமுகம்!

முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது ஐ-போன் 16 வரிசை அறிதிறன் பேசிகளை இந்தியாவில் நடப்பு மாதத்துக்குள் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

இது தவிர, தில்லி-என்சிஆா், மும்பை உள்ளிட்ட மேலும் நான்கு நகரங்களில் பிரத்யேக விற்பனையகங்களைத் திறக்கவிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது புத்தம் புதிய அறிமுகமான ஐ-போன் 16 மற்றும் 16 ப்ரோ ரக அறிதிறன் பேசிகளின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது.

அவற்றில் ஐ-போன் 16 ப்ரோ ரூ.1,19,900-லிருந்தும் ஐ-போன் ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900-லிருந்தும் கிடைக்கிறது.இந்தியச் சந்தையில் முந்தைய ரக ஐ-போன்களைவிட குறைவான விலையில் புதிய ரகத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது இதுவே முதல்முறை.

Related posts

Madhya Pradesh: Villagers Against Decision To Merge Bilhari With Nowgong

Bombay HC Dismisses IIT’s Appeal Against Orders To Pay Gratuity With Interest To 3 Workers

Mumbai: Congress MP’s Son Arrested In Hit-And-Run Incident In Chembur