இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட உணவுகள் பயன்பாடு அதிகரிப்பு!

இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட உணவுகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் அதிகரித்து வருவது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், இந்த வகை உணவுகளில் ஊட்டச்சத்து அளவினை ஒழுங்குபடுத்தவும், ஆரோக்கியமான மாற்றுகளை ஏற்படுத்தவும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார ஆலோசனைக் குழு சார்பில் ’இந்திய உணவு நுகர்வு மற்றும் கொள்கை தாக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு பிரதமருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில், ’இந்தியர்களின் வீட்டுச் செலவீனங்களில் ஒரு குறிபிட்ட அளவு பதப்படுத்தப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு செலவிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது உலகளவில் அதிகரித்து வருவதாக இருந்தாலும், இந்தியாவில் 20 சதவீத குடும்பங்களில் முக்கியமாக நகர்ப்புறங்களில் இந்த உணவுப் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

ரஷிய அதிபர் புதினுக்கு ரகசியமாக இரு மகன்கள்: வெளியானது மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை!

பதப்படுத்தப்பட்ட உணவுகள் விற்பனை என்பது வளர்ந்து வரும் துறையாக உள்ளது. இது வேலைவாய்ப்புகளை அதிகரித்து வந்தாலும், இதனை அதிகளவில் உட்கொள்வதால் மக்களின் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய உணவு மற்றும் குளிர்பானங்கள் பேக்கேஜிங் துறை என்பது கணிசமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதன் சந்தை மதிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டில் 33.73 பில்லியன் டாலரில் இருந்தது. இது வருகிற 2028 ஆம் ஆண்டில் 46.25 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ. 38,835 கோடி) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கையின்படி, அதிகளவில் உட்கொள்ளப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஊட்டச்சத்து விளைவுகளைப் புரிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதாகவும், மேலும் இந்த உணவுகளின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை ஒழுங்குப்படுத்த, ஆரோக்கியமான மாற்றுகளை ஊக்குவிக்கவும் கொள்கை வரையறைகள் தேவைப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மிசோரமில் 33,000 -க்கும் மேற்பட்ட பன்றிகள் அழிப்பு… காரணம் என்ன?

’உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து உட்கொள்ளாமல் இருப்பது இரத்த சோகையை ஏற்படுத்தும். இந்த ஆய்வில் ரத்த சோகைக்கும், இரும்புச் சத்து உட்கொள்ளுதலுக்கும் இடையேயான எதிர்மறையான உறவுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

இது பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முழுவதும் காணப்படும் ஒன்றாகும்.

குழந்தைகள் மற்றும் பெண்களிடையே இரத்தசோகையை குறைக்கும் நோக்கத்திலான கொள்கைகள் மூலம் இரும்புச் சத்து உட்கொள்வதை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு உணவுகளின் மூலம் அதனை எடுத்துக்கொள்வது குறித்து கருத்தில் கொள்ள வேண்டும்’ என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு: சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது

’இந்த உணவுகளால் ஏற்படும் குறிப்பிட்ட உடல் உபாதைகள் குறித்து தனி ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதன்மூலம், பல்வேறு உணவுகளும், ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான விளைவுகளும் அறியப்படும்.

தினசரி சிறுதானியங்கள் உண்பதனால் உடலுக்கு தேவையான இரும்பு, சிங்க் சத்துகள் போதிய அளவில் கிடைக்கும். ஆனால், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது 20 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், நுண் ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைப்பது குறைகிறது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!