இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த காரை வைத்திருப்பவர் யார் தெரியுமா?

இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த காரை வைத்திருப்பவர் யார் தெரியுமா?

முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் கௌதம் அதானி ஆகியோர் வணிக உலகில் புகழ்பெற்று அபரிமிதமான செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்றவர்கள். இந்தியாவில் மட்டுமின்றி, அவர்களின் வெற்றிகரமான முயற்சிகள் மற்றும் முதலீடுகளால் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அவர்களின் செழுமையான வாழ்க்கை முறை மற்றும் மதிப்புமிக்க சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக உள்ள போதிலும், அவர்களில் எவரிடமும் இந்தியாவின் மிக விலையுயர்ந்த கார் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை.

தற்போது நாட்டிலேயே அதிக விலை கொண்ட காராக பார்க்கப்படுவது பென்ட்லி முல்சேன் இடபிள்யூபி (Bentley Mulsanne EWB Centenary Edition) என்ற கார் தான். இதன் விலை 14 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த காரை பிரிட்டிஷ் உயிரியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.எஸ்.ரெட்டி பெங்களூருவில் வாங்கியுள்ளார். இந்த பென்ட்லி முல்சேன் EWB கார் சக்திவாய்ந்த செடான் 6.75 லிட்டர் V8 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

விளம்பரம்

யார் இந்த வி.எஸ்.ரெட்டி?

பிரிட்டிஷ் உயிரியல் நிறுவனத்தை தொடங்கி அதனை தற்போது நிர்வகித்து வரும் வி.எஸ்.ரெட்டி, கார்களை வாங்கி குவிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர் என கூறப்படுகிறது. இவர் பல முன்னணி நிறுவனங்களின் கார்களையும் தன் வசம் வைத்திருக்கிறார். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் போன்ற ஆடம்பரமான கார்களின் உரிமையாளரான கவுதம் அதானியிடம் கூட இந்த பென்ட்லி முல்சேன் EWB கார் இல்லை என்பதே ஆச்சரியம். கவுதம் அதானியின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் போன்ற ஆடம்பர கார்களுடன் ஒப்பிடும்போது பென்ட்லி முல்சேன் EWB காரின் விலை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Car

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்