இந்தியாவில் முதன்முறை… பாலினத்தை மாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரி

இந்திய நிர்வாகத்துறை வரலாற்றில் முதன்முறை… பாலினத்தை மாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரி!

அனு கதிர் என பெயர் மாற்றம் செய்த அதிகாரி

இந்திய நிர்வாகத்துறை வரலாற்றில் முதன்முறையாக சிவில் சர்வீஸ் அதிகாரி ஒருவர் தனது பாலினத்தை மாற்றியுள்ளார். இதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

மத்திய நிதித்துறையின் கீழ் இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) அலுவலராக அனுசுயா பணியாற்றி வந்தார். சுங்க வரி மற்றும் சேவை வரி தீர்ப்பாய பிரிவில் ஐதராபாத்தில் இணை ஆணையராக அனுசுயா தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது பெயரை அனுசுயா என்பதில் இருந்து அனுகதிர் சூர்யா என்றும், பாலினத்தை பெண்ணிலிருந்து ஆண் என மாற்ற வேண்டும் என்றும், நிதித்துறை அமைச்சகத்திற்கு அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்றுள்ள அமைச்சகம் அவர் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

விளம்பரம்

அதிகாரிகள் பெயர் மாற்றப்படுவது என்பதை அடிக்கடி பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு அனுசுயா தனது பாலினத்தையே மாற்றியுள்ளார்.

இதன் அடிப்படையில் அனுசுயாவின் அனைத்து நிர்வாக ஆவணங்களும் மிஸ்டர். எம். அனுகதிர் சூர்யா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐஆர்எஸ் அதிகாரியான அவர் சென்னையில் 2013 டிசம்பரில் உதவி ஆணையராக பொறுப்பில் இருந்தார். பின்னர் அவர் துணை ஆணையராக 2018 இல் பதவி உயர்வு பெற்று, தற்போது ஐதராபத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க – 24 தொலை தூர ரயில்கள் ரத்து – எந்தெந்த ரயில்கள் தெரியுமா? – முழு லிஸ்ட் இதோவிளம்பரம்

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யுனிகேஷன் முடித்துள்ள அனுகதிர், போபால் தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் படிப்பையும் முடித்துள்ளார்.

சிவில் சர்வீஸ் அதிகாரி ஒருவர் தனது பாலினத்தை மாற்றியுள்ள சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
government officers
,
Union Govt

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்