இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம்: டிராவிஸ் ஹெட்

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. நவம்பரில் ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஹாரி ப்ரூக் கேப்டன்; அணியில் மீண்டும் லியம் லிவிங்ஸ்டன்!

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட், இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: இந்திய அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடுவதை விரும்புகிறேன் என நினைக்கவில்லை. நாங்கள் அதிக முறை எங்களுக்குள் போட்டிகளில் மோதிக் கொள்கிறோம். அதனால் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறந்த ஃபார்மில் இருக்கிறேன். அதனால் என்னால் நன்றாக விளையாட முடிகிறது.

இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது எளிதான காரியம் கிடையாது. அவர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம். அதனால், இந்தியாவுக்கு எதிராக எப்போதும் அதிரடியாக விளையாடுவது எனக்குப் பிடிக்கும் எனக் கூறமாட்டேன். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு எனது பங்களிப்பை வழங்குவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

சவாலான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம்: வங்கதேச கேப்டன்

சிறந்த ஃபார்மில் டிராவிஸ் ஹெட்

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல டிராவிஸ் ஹெட் மிக முக்கிய காரணமாக அமைந்தார். இந்தியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் அகமதாபாதில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி என இரண்டிலுமே சதம் விளாசி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு