இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து மகளிரணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து மகளிரணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த மகளிருக்கான டி20 உலகக் கோப்பையில் முதல் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடருக்கான நியூசிலாந்து அணியின் 15 பேர் கொண்ட வீராங்கனை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க..:அதிக எடை, ஒழுக்கமின்மை: மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்!

உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்த 2 வீராங்கனை தவிர்த்து மற்ற அனைத்து வீராங்கனைகளும் இருதரப்பு போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் ரோஸ்மேரி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லெய் கெஸ்பெரெக் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

NEW ZEALAND ODI SQUAD FOR INDIA TOUR
Polly Inglis earns maiden ODI call-up
Rosemary Mair rested
❌ Leigh Kasperek misses out
The ODI series kicks off on October 24 in Ahmedabad.#INDvNZpic.twitter.com/k9AIMSBstu

— Women’s CricZone (@WomensCricZone) October 21, 2024

கடந்த ஜூலை மாதம் மகப்பேறு காரணமாக விடுப்பில் இருந்த லாரென் டவுன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தத் தொடர் நியூசிலாந்துக்கு மிக முக்கியமானதாகும்.

விக்கெட் கீப்பர் பேட்டர் போலி இங்கிலிஸ் முதல் முறையாக நியூசிலாந்து அணிக்காக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கூறுகையில், “டி20 உலகக் கோப்பையை வென்றது போலவே, அடுத்தாண்டு இந்தியா நடக்கும் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்த ஒருநாள் தொடர் சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க..: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வில்லியம்சன் விலகல்!

இந்தத் தொடருக்கான மூன்று போட்டிகளும் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

போட்டிகள்

முதலாவது ஒருநாள் போட்டி – அக்டோபர் 24

2-வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 27

3-வது ஒருநாள் போட்டி – அக்டோபர் 29

ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி

சோஃபி டிவைன் (கேப்டன்), சுசி பேட்ஸ், ஈடன் கார்சன், லாரென் டவுன், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, போலி இங்கிலிஸ், ஃபிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், அமேலீயா கெர், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா பிலிம்மர், ஹன்னா ரோவ், லியா தஹு.

இதையும் படிக்க..: ஆண் குழந்தைக்கு தந்தையானார் சர்ஃப்ராஸ் கான்!

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!