இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: மற்றொரு இலங்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்

இலங்கை – இந்தியா முதலாவது டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

கொழும்பு

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ம் தேதி பல்லகெலேவில் நடக்கிறது.

இதில் டி20 தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு நாளில் முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இலங்கை அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தில்ஷான் மதுஷங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த தொடரிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சமீரா விலகிய நிலையில், தற்போது துஷாரா விலகி இருப்பது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Sri Lanka's preparations take another hit with a second major setback before the T20I series against India.Details https://t.co/ONpMax2HX0

— ICC (@ICC) July 25, 2024

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி