இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: சென்னை வந்த வங்காளதேச வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வங்காளதேச வீரர்கள் சென்னை வந்தனர்.

சென்னை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் கடந்த 12ம் தேதி சென்னை வந்தனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச அணி வீரர்கள் இன்று சென்னை வந்தனர்.

டாக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அனைவரும் விரைவில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா