இந்தியாவை உலகுக்கு காட்ட வேண்டிய நேரமிது: செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு ராகுல் வாழ்த்து!

45-ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்ட இந்திய அணியின் வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல், தனது எக்ஸ் பக்கத்தில் “ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் செஸ் ஒலிம்பியாட்டின் இறுதி சுற்றுகளுக்குள் அடியெடுத்து வைக்கும் இந்திய அணிக்கு, வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வரலாற்றை உருவாக்கும் விளிம்பில், இன்று நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் அயராத அர்ப்பணிப்பும், அசாத்தியமான திறன்களும்தான், உங்களை இந்த தருணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளன. தங்கத்தைக் கைப்பற்றி, இந்தியா எதனால் ஆனது என்பதை உலகுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடக்குமா? ஆர்வம் காட்டாத இந்திய ஒலிம்பிக் சங்கம்!

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, செப். 11 ஆம் தேதியில் தொடங்கியது. இதில், ஓபன் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் இந்திய அணி களம் காண்கிறது.

ஓபன் பிரிவு அணியில் அா்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோர் உள்ளனா். மகளிர் பிரிவு அணியில் டி.ஹரிகா, ஆா்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகா்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இருக்கின்றனா்.

ஆடவர் பிரிவில் அமெரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா உள்ளது. 10வது சுற்றின் முடிவில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்