‘இந்தியா-அமெரிக்கா இணைந்து உலக அமைதியை உறுதி செய்ய முடியும்’ – ராஜ்நாத் சிங்

Image Courtesy : @rajnathsingh

வாஷிங்டன்,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற அவர், அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது அவர் பேசியதாவது;-

"உலகில் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யக்கூடிய வலிமையான சக்திகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. இந்தியாயும், அமெரிக்காவும் இணைந்து உலகத்தின் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து வளர்ந்துள்ளது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியாவை ஒரு வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான தேசமாக உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்