இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு கூட்டம் – டெல்லியில் நடைபெற்றது

டெல்லியில் 21-வது இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

இந்தியா-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (எம்.சி.ஜி.) 21-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்தியாவின் தரப்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் (CISC) லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ மற்றும் அமெரிக்காவின் தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஜோசுவா ரூட் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்தியா-அமெரிக்கா இடையிலான தற்போதைய இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு நெறிமுறைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்செக்ஸ் 600 புள்ளிகள் நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு!

லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட் விற்பனையை நிறுத்தியது மீஷோ!

கோவை நூலகத்துக்கு பெரியார் பெயர்: மு.க. ஸ்டாலின்