இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரை பெற்றிருக்கிறது – சந்திரபாபு நாயுடு

புதுடெல்லி,

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும், சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய ஆதரித்து சந்திரபாபு நாயுடு பேசியதாவது;

"கடந்த மூன்று மாதங்களாக பிரதமர் மோடி ஓய்வின்றி இரவு, பகலாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மோடி மற்றும் அமித்ஷாவின் பிரசாரம் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய அதிகாரம் மிக்க மையமாக இந்தியா மாறி இருக்கிறது.

இந்தியா இன்று சரியான நேரத்தில் சரியான தலைவரை பெற்றிருக்கிறது. இந்தியாவிற்கு இது மிகச்சிறந்த தருணம், மிகச்சிறந்த வாய்ப்பு. இந்தியா மட்டும்தான் கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவை 3-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மோடி உருவாக்கப்போகிறார். தேச நலன் மற்றும் மாநிலங்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை சமன்படுத்தப்பட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்