இந்தியா எதிர்கொண்ட மிக மோசமான ரயில் விபத்துகள்!

இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான ரயில் விபத்துகள்… மீள்பார்வை!

விபத்து

ரயில் துறையில் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ முன்னேறி விட்டாலும், இன்னும் இதுபோன்ற மோசமான மற்றும் துயரமான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

மேற்கு வங்கம் மாநிலத்தில் சீல்டா சென்ற காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இந்த ரயில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்துகள் பற்றி திரும்ப பார்க்கலாம்.

பாலசோர் ரயில் விபத்து: ஜூன் 2023ல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலசோரில் விபத்தில் சிக்கியது. இதில் 293 பேர் உயிரிழந்த நிலையில், 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஷார்லிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மறும் சரக்கு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. ஜூன் 2ஆம் தேதி நடந்த இந்த விபத்து இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும். தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தடம்புரண்டது. அதன் பெட்டிகள் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தபோது, அவ்வழியாக வந்த சூப்பர்பாஸ்ட் ரயிலும் விபத்தில் சிக்கியது.

விளம்பரம்

பீகார் ரயில் விபத்து: பீகார் மாநிலத்தில் ஜூன் 6, 1981 அன்று பயணிகள் ரயில் தடம் புரண்டு, மான்சி-சஹர்சா இடையே பாக்மதி ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 800 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. 6 நாட்கள் மீட்புப் பணி நடந்த நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. அதேபோல், ரயில் விபத்துக்கான காரணமும் மர்மமாகவே உள்ளது.

பெருமான் ரயில் விபத்து: ஜூலை 8, 1988ஆம் ஆண்டு பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு, கொல்லம் அஸ்தமுடி ஏரியில் உள்ள பெருமான் பாலத்தில் இருந்து விழுந்து விபத்தானது. இதில் 105 பயணிகள் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. ஆனால், சீரமைக்கப்படாத டிராக் மற்றும் பழுதடைந்த சக்கரங்களால் விபத்து ஏற்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன.

விளம்பரம்

பிரோசாபாத் ரயில் விபத்து: ஆகஸ்ட் 20, 1995ல் உத்தரபிரதேசத்தில் உள்ள பிரோசாபாத் அருகே புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மற்றும் காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதியதில், 358 பயணிகள் உயிரிழந்தனர். அதிகாலை சுமார் 3 மணியளவில் சுமார் 2,200 பயணிகளுடன் காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த புருஷோத்தம் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

கைசல் ரயில் விபத்து: ஆகஸ்ட் 2, 1999 அன்று மேற்கு வங்கத்தில் அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலும், பிரம்மபுத்திரா மெயிலும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 290 பயணிகள் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக, இந்த ரயில் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

விளம்பரம்இதையும் படிங்க : ரயில் கோர விபத்து… பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

கன்னா ரயில் விபத்து: நவம்பர் 26, 1998 அன்று கொல்கத்தா சென்ற ஜம்முதாவி-சீல்டா எக்ஸ்பிரஸ் ரயிலும், பிராண்டியர் மெயிலும் மோதிக் கொண்டதில் 212 பயணிகள் உயிரிழந்தனர். பழுதடைந்த ரயில் பாதையால், இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது.

வலிகொண்டா ரயில் விபத்து: அக்டோபர் 29, 2005ல் டெல்டா பாஸ்ட் பயணிகள் ரயில் வலிகொண்டா அருகே தடம் புரண்டதால், 114 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், அவ்வழியாக சென்ற ரயில் தடம் புரண்டது.

விளம்பரம்

ஞானேஸ்வரி விரைவு ரயில் விபத்து: மே 28, 2010 அன்று வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு, சரக்கு ரயில் மீது மோதியது. இதில், 148 பயணிகள் பலியாகினர். மாவோயிஸ்டுகள் 46 செ.மீ., அளவுக்கு ரயில் தண்டவாளத்தை அகற்றியதால், விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இருப்பினும், மாவோயிஸ்ட் குண்டுவீச்சு காரணமாக விபத்து நடந்ததாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

பதேபூர் ரயில் விபத்து: பதேபூரில் ஜூலை 10, 2011 அன்று பகல் 12.20 மணியளவில் ஹவுரா – கல்ரா மெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டதால், 70 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆந்திரா ரயில் விபத்து: கடந்த ஆண்டு அக்டோபரில் விசாகப்பட்டினம் – பலாசா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். ரயில் ஒன்று சிக்னலை மீறிச் சென்றதால், விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

பீகார் ரயில் விபத்து: அக்டோபர் 2023, ஆனந்த் விஹார் டெர்மினல்-காமக்யா சந்திப்பு நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் பக்சரின் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Train
,
Train Accident
,
West Bengal train accident

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?