இந்தியா கூட்டணிக்கு ஜம்மு காஷ்மீரில் புதிய சிக்கல்?

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இந்தியா கூட்டணியில் குழப்பமா? – காஷ்மீர் காங். தலைவர் சொன்ன விளக்கம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு பிறகு மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.கவும் தனித்து போட்டியிடுகின்றன. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் ஜம்மு காஷ்மீர் தேர்தல் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

விளம்பரம்

90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு செப். 18, செப். 25 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை அக். 8ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 51 தொகுதிகளிலும் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம். மற்றும் பாந்தரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதே ஒவ்வொரு குடிமகனின் கடமை – ராகுல் காந்தி

முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு வேட்பாளர் பட்டியல் வெளியிடு என முடிந்து தற்போது அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகர்த்துவருகின்றன.

இந்நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனம், காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் தலைவர் தாரிக் ஹமீது தாரிக்கிடம் சிறப்பு பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் குறிப்பாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் முதலமைச்சர் யார் என்று கேட்கப்பட்டது.

விளம்பரம்

இதற்கு பதில் அளித்த தாரிக், “நாங்கள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியும் தொகுதி உடன்பாடும் ஏற்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பிறகே அதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசுவோம். காஷ்மீர் தேர்தல் என்பது வெறும் அரசு அமைப்பதற்கும், தலைவர்களுக்கு அரசில் பங்கு கொடுப்பது பற்றியதோ அல்ல. மாறாக மீண்டும் மாநில் அந்தஸ்தை பெறுவதும், சட்டமன்றத்தின் அதிகாரத்தை பெறுவது மேலும், இழந்த எங்களது அடையாளத்தையும் கண்ணியத்தையும் மீட்பதற்கான தேர்தல்” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் :
மத்திய அரசால் மட்டுமே ஜம்மு காஷ்மிருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் – அமித்ஷா

விளம்பரம்

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவந்தது. இந்தக் கூட்டணியில் இருந்து 2018ம் ஆண்டு பா.ஜ.க. விலகியது. அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியை அமைக்க முயற்சி செய்துவந்தது. ஆனால், அதற்குள்ளாக ஆளுநர் ஆட்சியை கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2019ல் மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்து 370-ஐ நீக்கி, மாநில அந்தஸ்தையும் கலைத்து அந்த பிரதேசத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இந்த பின்னணியிலேயே தற்போது அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

விளம்பரம்

தற்போது மீண்டும் இந்தியா கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்தான கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர், “தேர்தலுக்கு பிறகே அதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசுவோம்” என்று தெரிவித்திருப்பது ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தாலும், முதலமைச்சர் பதவிக்கு பல பிரச்சனைகளை அந்தக் கூட்டணி எதிர்க்கொண்டு ஆட்சி அமைப்பதில் சிக்கல் வரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Amit Shah
,
BJP
,
Congress
,
Jammu and Kashmir
,
Latest News
,
Rahul Gandhi

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்