இந்தியா பேட்டர்களுக்கானது மட்டுமில்லை…! 3 வித கிரிக்கெட்டிலும் பும்ராதான் தலைசிறந்தவர்..! கம்பீர் புகழாரம்!

பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய உற்சாகத்தோடு வங்கதேச அணி 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

முதல் டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை (செப். 19) சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது.

இதற்காக கேப்டன் ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி, நஜ்முல் ஷண்டோ தலைமையிலான வங்கதேச அணி வீரா்கள் கடந்த இரண்டு நாள்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

டிங் லிரென் தற்காலிக ஓய்வு..! குகேஷ் உடனான போட்டி நடைபெறாது!

டி20 உலகக் கோப்பையில் பும்ரா 15 விக்கெட்டுகளை எடுத்தார். வங்கதேசத்துக்கு உடனான டெஸ்ட் போட்டியில் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறார். பும்ரா குறித்து போட்டிக்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியதாவது:

3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகத்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இந்தியாவில் பந்துவீச்சாளர்கள் குறித்து அதிகமாக பேசுவதில்லை. எப்போதும் இந்தியாவின் பேட்டர்கள் குறித்தே பேசுவார்கள். ஒருகாலத்தில் இந்தியா பேட்டர்களின் ஆதிக்கம் மிகுந்ததாக இருந்தன. தற்போது பந்துவீச்சாளர்களை பற்றியும் பேச முக்கிய காரணமாக பும்ரா, ஷமி, சிராஜ், அஸ்வின், ஜடேஜாவுக்கு நாம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!

முடிந்த அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட பும்ரா விரும்புகிறார். இங்கிலாந்துக்கு எதிராக சிவப்பு நிற பந்தில் (டெஸ்ட்) செய்ததும் மே.இ.தீவுகளில் டி20யில் செய்ததும் அற்புதம். இந்தியாவுக்காக விளையாடுவதும் எப்போது ஆட்டத்தை மாற்றும் திறன்வாய்ந்தவருமான பும்ரா எங்களுடன் ஓய்வு அறையில் இருப்பது எங்களுக்கு பெருமைமிக்கது என்றார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!