இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் முழுமையாக ரத்து

இந்தியா – வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக நேற்றும் ஆட்டம் தடைபட்டது.

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்ததன் காரணமாக முதல் நாள் ஆட்டம் அதோடு ரத்து செய்யப்பட்டது.முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது .

இந்த நிலையில் இன்று காலை முதல் கான்பூரில் மீண்டும் மழை பெய்து வருவதால் 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update from Kanpur Play has been called off for Day 2 due to rains.#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBankpic.twitter.com/HD98D6LK9K

— BCCI (@BCCI) September 28, 2024

Related posts

கார் விபத்தில் சிக்கிய இளம் வீரர்… இரானி கோப்பை தொடரில் விளையாடுவதில் சிக்கல்

முதல் டி20: அயர்லாந்தை எளிதில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி