இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூஸி!

உலகக்கோப்பைத் தொடரில் 4-வது போட்டியில் இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்தியா- நியூசிலாந்து மோதும் போட்டி துபை மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிவன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்கம் முதலே நியூசிலாந்து வீராங்கனைகள் நிதானமாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுப்பட்டனர். சூசி 27 ரன்களும், ஜோர்ஜியா 34 ரன்களும், அமிலியா 13 ரன்களும், சோபி டிவைன் 57 ரன்களும், புரூக் 16 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணித் தரப்பில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் சேர்த்துள்ளது.

Related posts

Editorial: What Next For Classical Languages?

Editorial: Central Railway Commuters Are Given Short Shrift

The Importance Of Being Sonam Wangchuk