இந்திய அணியை வழிநடத்தும் ராபின் உத்தப்பா!

ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸஸ் போட்டியில் இந்திய அணி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என்று ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்தப் போட்டிகள் வருகிற நவ.1 ஆம் தேதி தொடங்கி 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

ஹாங்காங் சிக்ஸர் என்பது கிரிக்கெட் அணியில் 11 பேருக்கு பதிலாக 6-பேர் கொண்ட அணியாக விளையாடுவர்.

இந்தத் தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஹாங்காங், நேபாளம், நியூசிலாந்து, ஓமன், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 12 அணிகள் விளையாடவுள்ளன.

1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில் 2005 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வென்றிருந்தது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக செயல்படுகிறார். நவ.1இல் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்திய அணி.

தென்னாப்பிரிக்க அணி அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது. கடைசியாக நடந்த போட்டியிலும் தெ.ஆ. அணி கோப்பையை வென்றது குறிபிடத்தக்கது.

இந்திய அணி: ராபின் உத்தப்பா (கேப்டன்), கேதர் ஜாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி, ஷாபாஸ் நதீம், பாரத் சிபிலி, ஸ்ரீவஸ்டாஷ் கோஸ்வாமி (கீப்பர்).

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!