இந்திய சந்தையில் தனது பங்கை விரிவுபடுத்தும் டேவூ!

மும்பை: இந்திய சந்தையில் தனது பங்கை விரிவுபடுத்த வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் தற்போது நுழைந்துள்ளது டேவூ.

வளர்ந்து வரும் இந்திய சந்தையில் அதின் பங்கைக் கைப்பற்றும் நோக்கில் கொரிய பிராண்டான டேவூ இன்று இந்தியாவில் சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்கள் பிரிவில் நுழைவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உள்நாட்டு சந்தையில் நுழைந்த இந்நிறுவனம் எல்இடி டிவிகள், ஐஎஃப்பி எல்இடி டிவிகள், அல்கலைன் மற்றும் பேட்டரி இன்வெர்ட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் தடம்பதித்த டேவூ, மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ள நிலையில், உள்நாட்டு சந்தையில் தனது பயணத்தை தொடரும் வகையில் ஸ்மார்ட் சமையலறை மற்றும் வீட்டு உபகரணங்களுடன் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த போவதாக தெரிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுடன் வெற்றியை பதிவு செய்த டேவூ விரைவில் தங்கள் தயாரிப்புகளான இண்டக்‌ஷன் பிளேட், மிக்சர் – கிரைண்டர்கள், பிளெண்டர்கள், டோஸ்டர்கள், சாண்ட்விச் இயந்திரம் உள்ளிட்டவையை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் உத்தரவாதங்களுடன் வரும் உயர்தர தயாரிப்புகளை நோக்கி நுகர்வோர் படிப்படியாக மாறியுள்ளனர் என்றார் டேவூ இந்தியாவின் நிர்வாக இயக்குநரான எச் எஸ் பாட்டியா.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்