இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி: பாஜக

இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கடுமையான விமர்சித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி சென்றுள்ளார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உ.பி. போலீஸாருக்கு சட்டம் – ஒழுங்கு கேலியாக மாறியுள்ளது: பிரியங்கா

பாஜக தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கௌரவ் பாட்டியா கூறுகையில்,

காங்கிரஸ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தக் காந்தி முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற, பகுதிநேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மீதான ஜிஎஸ்டியை எதிர்ப்போம்: அதிஷி

ஆனால், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதிலிருந்து மக்கள் பெரும் பொறுப்பை அவரது தோள்களில் சுமத்தியுள்ளனர். ஆனால், இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டிற்குச் சென்ற காந்திக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக காந்தி கூறிய கருத்துகள் குறித்த செய்தியாளகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்தியாவில் திறன்களுக்குப் பஞ்சமில்லை என்றும், உற்பத்திக்காக தன்னை இணைத்துக் கொள்ளத் தொடங்கினால் நாடு சீனாவுடன் போட்டியிட முடியும் என்றும் ராகுல் கூறினார்.

இதற்கு காந்தியால் "சீனாவிற்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசவோ அல்லது அறிக்கை கொடுக்கவோ முடியாது" அவர் இந்தியாவைப் பலவீனப்படுத்துகிறார். அவர் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறார். காங்கிரஸ் தனது ஆட்சியின் போது "சீனாவுடன் கட்சிக்குக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டதாகவும் பாட்டியா கூறினார்.

“இந்திய ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகள் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவு என்று அவர் கூறினார்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்