இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த பேருந்தை அடல் இந்தூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் இயக்க உள்ளது. இதுகுறித்து மேயர் புஷ்யமித்ர பார்கவா கூறுகையில், நீண்ட கால முயற்சிகளுக்குப் பிறகு, இரட்டை அடுக்குப் பேருந்தை இந்தூருக்கு வெற்றிகரமாகக் கொண்டு வந்துள்ளோம்.

இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஒரு பேருந்து மட்டுமே தற்போது இந்தூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் மற்றும் வழித்தடத்தை ஒரு வாரத்தில் இறுதி செய்த பிறகு பேருந்து இயக்கப்படும். நகரத்தில் இந்த சேவை வெற்றிகரமாக இருந்தால், மேலும் இதுபோன்ற பேருந்துகள் வாங்கப்படும்.

நகரவாசிகளின் காத்திருப்புக்கு விடை கிடைத்துவிட்டது. மத்தியப் பிரதேசம் மட்டுமின்றி நாட்டிலேயே இரண்டாம் நிலை நகரத்தில் இயக்கப்படும் முதல் பேருந்தும் இதுவேயாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்