இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

இந்தோனேசியாவின் கோரண்டலோ மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

நிலநடுக்கமானது அதிகாலை 2.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்க மையப்பகுதி கோரண்டலோ நகருக்கு தென்மேற்கே 77 கீ.மீ தொலைவில் கடற்பரப்பிற்கு அடியில் 132 கி.மீ ஆழத்தில் பதிவானது.

இதையும் படிக்க: பாலியல் குற்றச்சாட்டு: மலையாள நடிகர் முகேஷ் கைது!

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால மக்கள் அச்சமடைந்து குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். கடலில் அலைகள் அதிகமாக எழும்பி வருகிறது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை.

நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!